
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது.
இதில் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியும் அடக்கம்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த வாக்குபதிவில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட T- கொசப்பாளையம் வாக்குபதிவு மையத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியை பரபரப்பாக்கியது.
கனிமொழி என்ற பெண் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த போது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மர்ம நபரை மடக்கி பிடித்துள்ளனர்.
காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஏழுமலை என்றும், அப்பெண்ணின் முன்னாள் கணவர் என்றும் சொல்லப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்தி குத்து
வாக்குச்சாவடி மையத்தில் கத்திக்குத்து#Viluppuram #Vikravandi #VikravandiByElection #Election2024 #VotePolling #DMK #PMK #NTK #ByElection #Newstamil #NewsTamil24x7 pic.twitter.com/tYx77xakl9
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 10, 2024