
மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல்
செய்தி முன்னோட்டம்
மும்பையிலுள்ள பரபரப்பான சாலையின் ஓரத்தில் வயதான தம்பதியர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோபதிவு ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.
அதன்படி, அந்த வீடியோபதிவில், முதலில் மிகுந்த கோபத்தோடு காணப்படும் அந்த வயதான பெண்மணி பெரிய பாத்திரத்தை கொண்டு தனது கணவனை தாக்குகிறார்.
அடிவாங்கும் அவரது கணவன் அந்த பாத்திரத்தை தனது மனைவியிடம் இருந்து பிடிங்கி அடிப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார்.
மீண்டும் அவரிடமிருந்த பாத்திரத்தை வாங்க மனைவி முயற்சிக்கிறார், கடுமையான வாக்குவாதமும் நடப்பதாக தெரிகிறது.
இந்த நிகழ்வை அங்குள்ள அனைவரும் சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, யாரும் அதில் தலையிட முயற்சிக்கவில்லை.
இந்த வீடியோ பதிவினை பலரும் பார்த்துவரும் நிலையில், தங்கள் கருத்துக்களையும் சுவாரஸ்யமான முறையில் பதிவுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ வைரலாகிறது
Kalesh B/w Couple on Road 🥹 pic.twitter.com/QVoliwus73
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 4, 2023