அடுத்த செய்திக் கட்டுரை

வைரல் வீடியோ:பள்ளி ஆண்டு விழாவில் தந்தை-மகளின் அழகான தருணம்
எழுதியவர்
Nivetha P
Feb 08, 2023
11:28 am
செய்தி முன்னோட்டம்
வைரல் வீடியோ : ஓர் பள்ளி ஆண்டு விழாவில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடந்த அழகான தருணம் தற்போது வீடியோ பதிவாக இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவை ஐ.பி.எஸ். அதிகாரியான திபன்சு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
24 நொடிகள் உள்ள இந்த வீடியோ பதிவில், ஓர் பாடலுக்கு மேடையில் நடனமாடும் தனது மகளுக்கு அவளது தந்தை உதவுவதை காண முடிகிறது.
மேடையின் கீழே இருந்தபடியே அவர் தனது மகளுக்கு ஆடிக்காட்டி கொண்டிருக்கிறார்.
தந்தை, மகளுக்கு இடையில் உள்ள உறவு மிக தூய்மையானது, அதனை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது வைரலாகும் இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளி ஆண்டு விழாவில் தந்தை-மகளின் அழகான தருணம்
And the #FatherOfTheYear Award goes to... 😅 pic.twitter.com/iqDyp4Fqkr
— Dipanshu Kabra (@ipskabra) February 7, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது