ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பழங்குடியின கலாச்சார நிகழ்ச்சியுடன் வரவேற்றார். முதலில் பழங்குடியின பறையை அடித்து குடியரசு தலைவரை வரவேற்ற மம்தா பானர்ஜி, அதன் பின் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். மேலும், தனது உரையின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி, "அரசியலமைப்பைப் பாதுகாக்க" ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். "மேடம், நீங்கள் அரசியலமைப்பு தலைவர். தயவு செய்து இந்த நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்கவும்" என்று மேடையில் இருந்து மம்தா பானர்ஜி கூறினார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் குடியரசு தலைவர் முர்முவுக்கானஇந்த நிகழ்ச்சியை மாநில அரசு ஏற்பாடு செய்ததிருந்தது.