
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே பொதுக்குழுத்தேர்தல் நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிராகவும் வழக்கு பதிவுசெய்தார்.
அந்த வழக்கையும் சேர்த்து பிரதான வழக்குகளோடு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்த விசாரணையில். அனைத்து தரப்பு வாதங்களும் அண்மையில் நிறைவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி,கடந்த ஜூலை 11ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுசெயலாளருக்கான தேர்தலுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவுப்பிறப்பித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது
#BREAKING ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு #AIADMK #ADMK #EPS #OPS #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/3Ek9cYv3Op
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 28, 2023