வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி
செய்தி முன்னோட்டம்
கடந்த டிசம்பரில் புதுக்கோட்டை-வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து கண்டறிய, ஏற்கனவே 4 சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் டி.ன்.ஏ.ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இறையூரை சேர்ந்த ஓர் சிறுவன் உள்பட 4 பேர் மற்றும் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் என மேலும் 6 பேருக்கு மீண்டும் டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல் செய்திருந்தது.
அதன்படி இதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், உடல்நிலை சரியில்லை என கூறியவர்களிடம் மட்டும் உடல்நலனை பொறுத்து பரிசோதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வேங்கை வயல்
#JUSTIN வேங்கைவயல்: மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை #DNAtest #Vengavayal #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/TsitjSW9hP
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 6, 2023