கோயம்பேடில் காய்கறி விலை சரிவு; மக்கள் மகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
சென்ற மாதம் வரை விண்முட்டும் அளவு உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை, கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் தற்போது மழை குறைந்துள்ளதால், காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால், கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
மொத்த விற்பனையில், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.5 -இற்கும், ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
card 2
காய்கறி விலை சரிவு
பச்சை மிளகாய்: 35 ரூபாய்/ கிலோ
உருளைக்கிழங்கு: 30 ரூபாய்/ கிலோ
பீட்ரூட்: 35 ரூபாய்/ கிலோ பாகற்காய்: 20 ரூபாய்/ கிலோ
சுரைக்காய்: 20 ரூபாய்/ கிலோ அவரைக்காய்: 40 ரூபாய்/ கிலோ என விற்பனையாகிறது.
கடந்த மாதம் 200 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியும், இஞ்சியும், விலை குறைந்து, முறைப்படி, கிலோ 20 ரூபாய்க்கும், 150 முதல் 170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை பட்டியல், கோயம்பேடு மொத்த விலை பட்டியலாகும். வெளிச்சந்தையில், தக்காளி, ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.