
சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அதிவேகமான 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
இதனிடையே நாட்டின் 12வது வந்தே பாரத் ரயில் சென்னை-கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார் என்று முன்னதாகவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இதற்கான வெள்ளோட்டம் இன்று(மார்ச்.,30) துவங்கியுள்ளது.
அதன்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு முற்பகல் 11.40க்கு கோவையை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தில் தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம்
#JUSTIN | சென்னை சென்ரல் - கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடக்கம்; இன்று அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது!
— Sun News (@sunnewstamil) March 30, 2023
வரும் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி, சென்னை - கோவை வந்தே பாரத் சேவையை தொடங்கி வைக்கிறார்#SunNews | #PMModi | #Chennai