புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
2019ஆம் ஆண்டு இதே நாளில், பாதுகாப்புப் படையினரின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை தற்கொலைப் படை பயங்கரவாதி செலுத்தியதில் குறைந்தது 40 CRPF வீரர்கள் உயிரிழந்தனர். பஹவல்பூரில் உள்ள மசூத் அசார் தலைமையிலான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது. 3 ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று(பிப் 13) அஞ்சலி செலுத்தினார். "இதே நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரர்களை நினைவு கூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் நாம் மறக்க மாட்டோம். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய அரசு
பாலகோட்டில் உள்ள ஜபா டாப் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியது. அப்போது இந்தியா ஜெய்ஷின் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தது. வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், அங்கு 300க்கும் மேற்பட்ட மத பயங்கரவாதிகள் இருந்ததாக படங்கள் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், மசூத் அசார் பாகிஸ்தானிய அரசின் பாதுகாப்பில் தொடர்ந்து சுதந்திரமாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு, சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் அவரது சகோதரர் மொகிதீன் ஔரங்கசீப் ஆலம்கிர் என்கிற அம்மார் அல்வியை மத்திய அரசு தனிப்பட்ட பயங்கரவாதியாக அறிவித்தது. அல்வி, ஜெய்ஷ் அமைப்பின் மூத்த தலைவர் மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் ஆவார்.