வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகிய வைஷ்ணவ கோவில்களில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. ஏகாதசி என்றால் பதினோராவது நாள் என்று அர்த்தமாகும். இந்து சந்திர காலெண்டரின்படி, ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை வரும் பதினோராவது நாளில் ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகத்தில் பரம்பத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கத்திற்கான ஏழாவது வாசல் திறக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியின் போது விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுபவர்கள் பாவங்களை கழைந்து நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஐதீகமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் இன்றும் நாளையும் விரதம் இருந்தால் அவர்களுக்கு மோட்சமே கிட்டிவிடுமாம்.