
மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
மதுரை- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை காலை 6:40 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்த வைகை எக்ஸ்பிரஸ், அக்டோபர் 1ஆம் தேதி(நாளை) முதல் காலை 7:10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மேலும், மதுரையில் இருந்து சென்னைக்கு போகும் வைகை எக்ஸ்பிரஸின் நேரத்தில் மட்டுமே மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வைகை எக்ஸ்பிரஸின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ட்விட்டர் அஞ்சல்
வந்தே பாரத் ரயிலால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்
#JUSTIN வந்தே பாரத் ரயிலால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம் #VandeBharatExpress #Vaigaisuperfastexpress #madurai #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/ZTIwwbThNu
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 30, 2023