
6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முன்னதாக 60 நாட்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில்,தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் நச்சுத்தன்மையினை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த மருந்துகளை தடை செய்ய தேவையான சாத்திய கூறுகளை ஆராய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரைபடி தற்போது இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அசிபேட், ப்ரோஃபெனோபாஸ், சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் உள்ளிட்ட மருத்துகளுக்கே தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை
6 பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நிரந்தர தடை... தற்கொலையைக் குறைக்க தமிழ்நாடு அரசு அதிரடிhttps://t.co/tJWokE9co2
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 11, 2023