UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம்
இந்தியா: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் 2023 தேர்வு முடிவை அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம், மொத்தம் 1,016 பேர் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். UPSC தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். இந்த ஆண்டு, ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதல் இடத்தையும், அனிமேஷ் பிரதான் என்பவர் இரண்டாவது இடத்தையும், டோனூரு அனன்யா ரெட்டி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் பட்டியல் எண்களை UPSC வெளியிட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 355 தேர்வர்களின் நிலை தற்காலிகமாகவே உள்ளது.
UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: தகுதிப் பட்டியல்
1. ஆதித்ய ஸ்ரீவஸ்தவா 2. அனிமேஷ் பிரதான் 3. டோனூரு அனன்யா ரெட்டி 4. பி கே சித்தார்த் 5. ராம்குமார் ருஹானி 6. சிருஷ்டி தபஸ் 7. அன்மோல் ரத்தோர் 8. ஆஷிஷ் குமார் 9. நௌஷீன் 10. ஐஸ்வர்யம் பிரஜாபதி 11. குஷ் மோத்வானி 12. அனிகேத் சாண்டில்யா 13. மேதா ஆனந்த் 14. சௌர்யா அரோரா 15. குணால் ரஸ்தோகி 16. அயன் ஜெயின் 17. சுவாதி சர்மா 18. வர்தா கான் 19. சிவம் குமார் 2. ஆகாஷ் வர்மா