Page Loader
"யார் பெரியவனு அடிச்சு காட்டு": காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவதில் பஞ்சாயத்து
"யார் பெரியவனு அடிச்சு காட்டு": காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவதில் பஞ்சாயத்து

"யார் பெரியவனு அடிச்சு காட்டு": காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவதில் பஞ்சாயத்து

எழுதியவர் Venkatalakshmi V
Jan 18, 2024
09:16 am

செய்தி முன்னோட்டம்

காஞ்சிபுரத்தில் பிரபலமான வரதராஜ பெருமாளுக்கு தினந்தோறும் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை யார் பாடுவது என ஐயங்கார் சமூகத்தில் உள்ள இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஐயங்கார் சமூகத்தில், வடகலை, தென்கலை என இரு உட்பிரிவுகள் உண்டு. பெருமாளுக்கு பூஜை செய்வதில் இந்த இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது உட்கட்சி பூசல்கள் நிலவி வரும். இந்த சூழலில், காஞ்சிபுரத்தின் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் எழுந்தருளிய போது, பெருமாளின் புகழ் பாடும் பிரபந்தத்தை யார் பாடுவது என இந்த இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, கைகலப்பு நடந்தது.

ட்விட்டர் அஞ்சல்

வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவதில் பஞ்சாயத்து