2 கோடி உறுப்பினர்களைக் கடந்து தமிழக வெற்றிக் கழகம் இமாலய மைல்கல்!
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய அரசியல் வரலாற்றையே ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போடும் வகையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேர்க்கை தற்பொழுது 2 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் பேரியக்கமாகத் தவெக உருவெடுத்துள்ளது. திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால அரசியல் ஆதிக்கத்திற்கு மத்தியில், விஜய் தலைமையிலான தவெக படைத்துள்ள இந்த உறுப்பினர் சேர்க்கை சாதனையைச் சமூக வலைத்தளங்களில் தவெக ஐடி விங் மற்றும் தொண்டர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
தமிழக வெற்றிக் கழகம்
சட்டமன்றத் தேர்தல் களம்
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், முதல் முறையாகத் தேர்தல் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், மிகக் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களை அதிரடியாகக் கைப்பற்றி, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துப் புதிய உள்கட்டமைப்புடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. தேர்தல் களத்தில் சுமார் 34.92 சதவீத வாக்குகளை அள்ளி, தமிழகத்தின் பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்குப் பெரும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.