திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
திரிபுரா மாநிலத்தில் இன்று(பிப் 16) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளிவரும்.
மத்தியில் ஆளும் பாஜக, திரிபுராவில் வேற்று பெற கடுமையாக உழைத்து வருகிறது.
சிபிஎம் எதிர்பாராத விதமாக காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது. திரிணாமுல் கட்சியும் ஓய்வில்லாமல் வெற்றிக்காக உழைத்து வருகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, திரிபுராவில் சிபிஎம் கட்சி தான் ஆட்சி செய்து வந்தது.
கடந்த 2018இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக மொத்த இடங்களான 60இல் 36 இடங்களைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
அந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையான 31க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், 8 இடங்களில் வெற்றி பெற்ற IPFT(திரிபுராவின் பழங்குடியின முற்போக்கு முன்னணி) உடன் கூட்டணி வைத்துக்கொண்டு பாஜக ஆட்சியை ஆரம்பித்தது.
திரிபுரா
மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் திப்ரா மோதா கட்சி
திரிபுராவில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த சிபிஎம் கட்சி, காங்கிரஸுடன் இணைந்துள்ளது.
இதற்கான பிரச்சாரத்தை திரிபுராவில் நான்கு முறை முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் வழிநடத்தி வருகிறார்.
இடதுசாரி முன்னணியான சிபிஎம் மாநிலத்தின் 60 இடங்களில் 47 இடங்களில் போட்டியிடும். காங்கிரஸுக்கு வெறும் 13 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
2018இல் சிபிஎம் 16 இடங்களை வென்றாலும், முந்தைய சட்டமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
மேலும், திரிபுரா அரச குடும்ப வாரிசான பிரத்யோத் கிஷோர் டெபர்மாவின் புதிய கட்சியான திப்ரா மோதா கட்சி மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இந்த முறை எந்த கட்சி வெற்றி பெறும் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.