21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!
கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை, கணவர் இறந்தால் எரியும் சிதையில் உடன்கட்டை ஏறுவது என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு, புராணங்களில் கெட்ட கதை என்று நினைப்பதை தவறு என்று நிரூபிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாவட்டத்தில், பஞ்சருபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, அக்னி பரீட்சை செய்ய வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. தனது தம்பி தனது மனைவியுடன் பாலியல் தொடர்பில் இருப்பதாக குற்றசாட்டை எழுப்பினார். இதையடுத்து, கிராமப் பஞ்சாயத்தில் தனது தம்பி மீது சந்தேகம் இருப்பதை தெரிவித்து புகார் மேற்கொண்டுள்ளார்.
தவறு இல்லை என்றால் காயம் ஏற்படாது: முட்டாள்தனமான பஞ்சாயத்து தீர்ப்பு
பொதுவாக இது போன்ற குற்றசாட்டுக்களில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க பழுக்கக் வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, பஞ்சாயத்தின் தீர்ப்புப் படி, பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை குற்றம் சாட்டப்பட்ட நபர் கைகளால் பிடிக்க வேண்டும், என்று கூறப்பட்டது. அவ்வாறு செய்யும் போது கைகளில் காயம் ஏற்படக் கூடாது, காயம் பட்டால், அவர் தவறு செய்தவர் என்பதைக் குறிக்கிறது என்று பஞ்சாயத்து தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட நபரும், நன்றாக காய்ச்சப்பட்ட இரும்புக்கம்பியை கைகளால் எடுத்து வீசி எறிந்தார். தீக்காயம் எற்படவில்லை என்றாலும், புகார் அளித்தவர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார். இதையடுத்து, அவரின் மனைவில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.