Page Loader
இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு
இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு

இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு

எழுதியவர் Nivetha P
Mar 29, 2023
08:29 pm

செய்தி முன்னோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி-கற்பகம் தம்பதியினர். இவர்களது மகளான பிரதீஷா 9வயது சிறுமி. நான்காம் வகுப்பு படித்துவரும் இவர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் செய்து வெளியிட்டு பிரபலமானவர். குழந்தை பருவத்திலேயே இவர் துருதுருவென்று இருப்பார், அப்போதே அவருக்கு தனித்திறமை இருந்த காரணத்தினால் தான் படத்தில் வரும் காமெடி காட்சிகளுக்கு டயலாக் பேசுவது, முக பாவனைகளை அதற்கேற்றாற்போல் செய்துக்காட்டுவது போன்றவைகளை அவரால் செய்யமுடிந்தது என்றே கூறலாம். இவரை அப்பகுதியில் 'இன்ஸ்ட்டா குயின்' என்று அழைத்தனர். இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 8மணியளவில் சிறுமி பிரதீஷா அருகிலுள்ள தனது பாட்டி வீட்டில் பக்கத்துவீட்டு தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரது தாய்-தந்தை அங்குவந்து விளையாடியதுபோதும், வீட்டிற்குசென்று படி என்று கூறிவிட்டு மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்றதாக கூறப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை

படிக்க சொல்லி கண்டித்ததால் விபரீதம்

ஒரு மணிநேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தியும், கற்பகமும் வீட்டிற்கு வந்துள்ளார்கள். அப்போது வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டுள்ளது, வெகு நேரம் கதவை தட்டி பார்த்தும் அவர் வீட்டின் கதவை திறக்கவில்லை. இதில் பயந்துபோன கிருஷ்ணமூர்த்தி வெளிப்புறத்தில் இருந்து படுக்கையறை ஜன்னலை உடைத்துள்ளார். அப்போது பிரதீஷா வெள்ளை நிற சிறிய துண்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தோழிகள் முன்பு படிக்கச்சொல்லி கண்டித்ததால் தான் சிறுமி இவ்வாறு செய்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.