LOADING...
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு
பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும்

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே மாதத்திலும் வெயில் சதம் அடித்து ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. வெப்ப சலனம் ஜூன் முதல் வாரம் வரை நீடிக்கும் என IMD கணித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement