Loading...
வெற்றி வீடு திட்டம் 2026-27: முதற்கட்டமாக 70,000 வீடுகள் கட்ட Rs.3,500 கோடி நிதி ஒதுக்கீடு
வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்டுவதற்காக ₹3,500 கோடி நிதி ஒதுக்கீடு

வெற்றி வீடு திட்டம் 2026-27: முதற்கட்டமாக 70,000 வீடுகள் கட்ட Rs.3,500 கோடி நிதி ஒதுக்கீடு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
11:35 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களின் உறைவிட கனவை நனவாக்கும் வகையில், 2026-27-ஆம் நிதியாண்டில் முதற்கட்டமாக 70,000 வீடுகள் கட்டுவதற்காக ₹3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 லட்சம் வீடுகளைக் கட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு ₹5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சமையலறையுடன் சேர்த்து குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை வீடுகள் கட்டப்படும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ₹12,000 மதிப்பில் தனியாக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.

வட்டி மானியம்

வட்டி மானியம் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கான அதிகாரம்

பயனாளிகள் வீட்டின் கூடுதல் தேவைக்காக வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் வரை கடன் பெற்றால், 15 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் அரசு சார்பில் வழங்கப்படும்.

இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட அவசரச் சூழல்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவ, மாவட்ட இலக்கில் 5 சதவீத வீடுகளை ஒதுக்கும் அதிகாரம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்றும், இதற்கான தகுதிபெற்ற பயனாளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிடப்படும் என்றும் அரசாணையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT