புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு
கடந்த 2004ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான 'தேசிய பென்ஷன் திட்டம்' அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்சன் வராது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய அரசு ஊதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அளிக்கக்கோரி அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில் 2003ம் ஆண்டில் இருந்து இப்பொதுவரை தமிழக அரசின் அனைத்து துறைகளின் கீழும் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற உத்தரவு அளிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பழைய திட்டத்திற்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல்
இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், அரசாணைகள் வாயிலாகவோ, அரசு விளக்கங்கள் மூலமோ, நீதிமன்ற உத்தரவு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் மூலமோ புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மாற விரும்பும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி, குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது ஊதியத்தில் பாதி அதாவது 50 சதவீதம் பென்ஷனாக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய நடைமுறையின் கீழ், மத்திய அரசில் ஏப்ரல் 1ம் தேதி அன்றோ அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடவேண்டியவை.