தேர்தல் நாளில் ஓட்டுப் போட விடுமுறை இல்லையா? புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைச் சிரமமின்றி ஆற்றுவதற்காக, அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் உள்ள பிரிவு 135பி'ன்படி, வாக்குப்பதிவு நாளில் தகுதியுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் விடுமுறை வழங்குவது கட்டாயமாகும். இந்த விடுமுறைக்காகப் பணியாளர்களின் ஊதியத்தில் எவ்விதப் பிடித்தமும் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
புகார் அளிக்கும் முறை
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிப்பது எப்படி?
ஒருசில தனியார் நிறுவனங்கள் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க மறுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, தமிழகத் தொழிலாளர் நலத்துறை சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் நிறுவனம் வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்றாலோ அல்லது விடுமுறைக்காக சம்பளத்தைப் பிடித்தம் செய்தாலோ, கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்டத்திற்குரிய எண்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம்.
நடவடிக்கை
நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகள்
வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், தேர்தல் நாளன்று நிறுவனங்கள் முறையாக விடுமுறை அளித்துள்ளனவா என்பதைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள். பணியாளர்கள் தங்களுக்குரிய விடுமுறை உரிமையைப் பெறுவதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். எனவே, எவ்விதத் தயக்கமும் இன்றி வாக்காளர்கள் தங்களது உரிமையை நிலைநாட்ட இந்தப் புகார் எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.