LOADING...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் , நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, குஷ்பூ வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் உட்பட நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் , நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, குஷ்பூ வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2025
10:23 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த்சாமி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரின் வீடுகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 16) இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் மின்னஞ்சல், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு இடங்களிலும் உடனடியாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கியப் பிரிவினரை உடனடியாக அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் குடியிருப்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரச் சோதனை நடத்தினர்.

புரளி

புரளி என உறுதி செய்த காவல்துறை

பல மணி நேரம் நீடித்தச் சோதனைக்குப் பிறகு, எந்தவிதமான வெடிக்கும் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இந்த மிரட்டல் ஒரு புரளி என்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர். எனினும், மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து எந்த விவரங்களையும் அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. முன்னதாக, கடந்த வாரம் நடிகர் அஜித்குமாரின் இஞ்சம்பாக்கம் இல்லத்திற்கு இதுபோலவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் அருண் விஜய்யின் இல்லம், இசை அமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டுடியோ போன்ற முக்கியப் பிரபலங்களின் வீடுகளும் இதற்கு முன் இது போன்றப் புரளி வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தச் சம்பவம் பொதுமக்களிடமும், அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.