Page Loader
உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் 
முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2023
08:15 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிகளிலும், அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இதனால், அவருக்கு அதிக உடல் சோர்வு ஏற்பட்டதாகவும், அதுமட்டுமின்றி வருடாந்திர உடல் பரிசோதனைக்காகவும், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். நேற்று, ஜூலை 3 ஆம் தேதி மாலை 5:30 மணியளவில், மருத்துவமனைக்கு சென்ற முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள், பரிசோதனை முடிவடைய ஒரு நாள் தேவைப்படும் என்பதால், நேற்று இரவு மருத்துவமனையிலேயே அனுமதிக்க முடிவு செய்தனர். இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ அறிக்கையில், பரிசோதனைகள் முடிவடைந்து, தமிழக முதல்வர் இன்று வீடு திரும்புவார் எனக்கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர்