மஞ்சள் நிற பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் பயன்பாட்டிற்காக 1000 பேருந்துகளை புதிதாக வாங்கவும், 500 பேருந்துகளை சீரமைக்கவும் ரூ.500 கோடி நிதி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்புகள் வெளியானது.
அதன்படி, சீரமைக்கப்படும் பேருந்துகளில் பொதுவாக 54 சீட்கள் இருக்கும் பட்சத்தில், பயணிகள் வசதிக்காக அது 50 சீட்டாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் ரூ.14 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இதன் முதற்கட்டமாக நவீன வசதிகள் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ள 100 பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,11)கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மஞ்சள் நிற பேருந்து சேவை
மஞ்சள் நிறப் பேருந்துகளை தொடங்கிவைத்தார் முதல்வர் #TNGovt | #MKStalin | #YellowBus | #GovtBus pic.twitter.com/shlPJXmfKg
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 11, 2023