NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு 
    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 14, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    கிட்டத்தட்ட 17 மணிநேரம், நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது அவருக்கு பாதி வழியிலேயே நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனு ஏற்பு 

    இன்று மதியம் விசாரணை நடக்கும் என அறிவிப்பு 

    இருதய துடிப்பில் மாறுபாடு இருந்த காரணத்தினால் ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பதை சோதிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று தெரிகிறது.

    இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

    முதல்வருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இதனிடையே, அமைச்சரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

    இந்த மனுவானது தற்போது விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுதாக்கல் நடைமுறைகள் முடியும் பட்சத்தில், பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    மின்சார வாரியம்

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    தமிழ்நாடு

    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்  திருநெல்வேலி
    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் மின்சார வாரியம்

    மு.க ஸ்டாலின்

    பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி  கவர்னர்
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு  ஆளுநர் மாளிகை
    தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  அமைச்சரவை
    பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு  திமுக

    மின்சார வாரியம்

    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025