தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த திமுக ஆட்சி துவங்கி வரும் 7ம் தேதியோடு 2ம் ஆண்டினை நிறைவு செய்து 3ம் ஆண்டிற்குள் செல்கிறது.
இச்சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(மே.,2) காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது.
இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும்,
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்,
தமிழக மக்களின் பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் கொண்டு விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம்
புது தொழில்கள் துவங்குவது குறித்த ஆலோசனை
இந்நிலையில் இந்த மாநாடானது, மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புது தொழில்கள் உள்ளிட்டவைகளை முதலீட்டாளர்களுடனும், உலக சந்தையுடனும் இணைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதற்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க அனுமதி கேட்டுள்ள நிறுவனங்கள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.