திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம்
செய்தி முன்னோட்டம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பிரசாதமாக லட்டுகளை வாங்காமல் செல்வதில்லை.
அந்தளவுக்கு திருப்பதி லட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த லட்டுகளை வாங்கிச்செல்ல தற்போது பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
இதில் மாற்றம் கொண்டுவந்துள்ள தேவஸ்தானம், இனி லட்டுகளை வாங்கிசெல்ல பழையகால முறையில் ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளது.
அதன்படி, இதற்காக பனை மற்றும் தென்னை ஓலைகளை கொண்டு பெட்டிகள் செய்து, இதற்கான தனி கவுண்டர்கள் அமைத்து ஓலை பெட்டிகளை பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் அளித்த கோயில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுசூழல் காக்கப்படுவதோடு, கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம்
திருப்பதி லட்டு வழங்குவதில் வருகிறது புதிய மாற்றம் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!#Tirupati #TirupatiLaddu #TirupatiDevasthanam https://t.co/5pV7YETzcT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 25, 2023