நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் மர்மம் இன்னும் விலகாத நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை புலனாய்வு அமைப்பு இன்று துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜெயக்குமார் மாயமான நிலையில், அவரது பாதி எறிந்த உடல், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 4-ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் மீட்கப்பட்டது. தமிழகத்தையும், அரசியல் வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் காவல்துறையினர் பல கட்ட விசாரணைகள் நடத்தினர். இதற்காக 10 தனிப்படைகள் அமைத்தும் துப்பு கிடைக்காததால், அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது தொடர்ந்து நீடிக்கும் மர்மமாகவே உள்ளது.
ஜெயக்குமார் மரணம்; சிபிசிஐடி விசாரணை ஆரம்பம்
#BREAKING || நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை தொடக்கம் சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமனம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பணியை தொடங்கியது சிபிசிஐடி#CBCID #Nellai #jayakumarthanasinghcase #jayakumarthanasingh... pic.twitter.com/PjYPSOybfX— Thanthi TV (@ThanthiTV) May 23, 2024