சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் தீவிரமாக சோதனை செய்து அபராதம் வசூலித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மண்டலத்தில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகரான எஸ்.நந்தகுமார் 2022-23 நிதியாண்டில் ரூ.1.55 கோடி அபராதம் வசூல் செய்துள்ளார். அவரையடுத்து, தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோஸலின் ஆரோக்கிய மேரி ரூ.1.03 கோடி அபராத தொகையினை வசூல் செய்து, நாடு முழுவதிலும் உள்ள பெண் டிக்கெட் பரிசோதகர்களில் அதிகளவு அபராத தொகையினை வசூலித்தவர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். மேலும் மூத்த டிக்கெட் பரிசோதகர் சக்திவேல் ரூ.1.10 கோடி அபராத தொகையினை வசூல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.