அடுத்த செய்திக் கட்டுரை

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
எழுதியவர்
Sindhuja SM
Jul 31, 2023
02:53 pm
செய்தி முன்னோட்டம்
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 6 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2023