LOADING...
இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா? 
கொல்கத்தா உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது

இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா? 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 10, 2025
04:26 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்திய உலகளாவிய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒரு மெட்ரோ நகரம், உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது. வரலாற்று சுவடுகளுக்கும், கலை, இலக்கியத்திற்கும் பெயர் பெற்ற அந்த நகரம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில், கொல்கத்தா உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரம் இதுவாகும். இது நியூயார்க் மற்றும் டப்ளின் போன்ற நகரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. (நியூயார்க் முதலிடத்தில் உள்ளது).

காரணிகள்

மன அழுத்தத்திற்கான முக்கிய காரணங்கள் (ஆய்வின்படி):

நிதி நிறுவனமான ரெமிட்லி (Remitly) வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கொல்கத்தாவில் வசிப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக பின்வரும் முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன: 1. நெரிசலான போக்குவரத்து: 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கச் சராசரியாக 34 நிமிடங்கள் 33 வினாடிகள் ஆவது, அன்றாட பயணங்களில் தாமதத்தையும், மன அழுத்தத்தையும் உண்டாக்குகிறது. 2. அதிக மக்கள் அடர்த்தி: நகரத்தில் உள்ள அதிகப்படியான மக்கள் அடர்த்தி. 3. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தல். 4. காற்று மாசுபாடு: சுற்றுச்சூழல் தொடர்பான சவால்கள்.

Advertisement