
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது
செய்தி முன்னோட்டம்
திருவாரூரின் பெருமைமிகு தியாகராஜர் சுவாமி கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று (வியாழக் கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் ஆரூரா, தியாகேசா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தியாகராஜ ஸ்வாமி பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினந்தோறும் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு 10:45 மணிக்கு தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
அதனைத்தொடர்ந்து, தொடர்ந்து இன்று (வியாழன்) அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.
தொடர்ந்து, ஆழித் தேரோட்டம் காலை 8:50 மணிக்கு தொடங்கியது.
ட்விட்டர் அஞ்சல்
தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம்
#WATCH | உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம்
— Sun News (@sunnewstamil) March 21, 2024
தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். #SunNews | #Tiruvarur | #AaliTherottam pic.twitter.com/wDP3DI7SOt