Page Loader
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் 
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் 

எழுதியவர் Nivetha P
May 03, 2023
08:15 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் வரும் 10ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பிரச்சாரத்தின் போது பேசியஅவர், மக்களின் அடிப்படைவசதிகள் குறித்து பேசாமல் மதத்தினை பற்றி பேசி மக்கள் மத்தியில் வெறுப்பினையும், பிரிவினையினையும் பாஜக உண்டாக்குகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் வலுவாகவுள்ளதால் அவர்களால் அங்கு காலூன்ற முடியவில்லை. கர்நாடகாவில் நடக்கும் இந்த தேர்தலில் பாஜக தோற்றால் அது நிச்சயம் 2024ம்ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய சூழ்நிலையினை உருவாக்குவோம் என்று பேசியுள்ளார். இவர் பேசிய இந்த பிரச்சார வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post