Page Loader
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!
சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன்

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

எழுதியவர் Sindhuja SM
Jan 04, 2023
06:05 pm

செய்தி முன்னோட்டம்

தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன்(46) இன்று மரணமடைந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வெ.ரா.திருமகன் போட்டியிட்டு 8904 வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் மூலமாக, 41 ஆண்டுகளுக்கு பின், ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்ட ஈ.வெ.ரா.திருமகன், இன்று(ஜன:4) காலை மூச்சுத்திணறலினால் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஈ.வெ.ரா.திருமகன் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்: