சென்னை தலைமை செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்
தமிழக அரசு அலுவலகங்களில் தினமும் ஓர் திருக்குறள், தமிழ் கலை சொற்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அண்மையில் அனைத்து துறை தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார். இது குறித்த சுற்றறிக்கையில், திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் உள்ளிட்ட அதிகாரங்களில் அதன் பொருளுடன் கூடிய தமிழ் ஆட்சி சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லினை அதற்குரிய தமிழ் சொல்லுடன் அலுவலக கரும்பலகை மற்றும் வெள்ளை பலகையில் நாள்தோறும் எழுதிவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தார். அதன்படி இன்று(மே.,15) சென்னை தலைமை செயலகத்தில் விளக்கத்துடன் கூடிய திருக்குறள் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Twitter Post
#WATCH | சென்னை தலைமைச் செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்! அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் எழுத வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு இருந்தார்#SunNews | #TamilNadu | @mkstalin pic.twitter.com/fOlVEZ2OXE— Sun News (@sunnewstamil) May 15, 2023 #WATCH | சென்னை தலைமைச் செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்! அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் எழுத வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு இருந்தார்#SunNews | #TamilNadu | @mkstalin pic.twitter.com/fOlVEZ2OXE— Sun News (@sunnewstamil) May 15, 2023
இந்த காலவரிசையைப் பகிரவும்