சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, 22 ஜனவரி 2015 அன்று, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் சில விவரங்கள் இங்கே: சேமிப்பு கணக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் அதிகபட்சமாக 10 வயதை வரை, அவரது பெயரில் துவங்கப்படலாம். ஒரு குடும்பத்தில் உள்ள, இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு வேளை, இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலோ, அல்லது முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தால் மட்டுமே, மூன்றாவது பெண் குழந்தையையும் இத்திட்டத்தில் இணைக்கலாம். இந்த கணக்கை, அருகிலுள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் துவங்கலாம். ஒரு நிதியாண்டில், ரூ.250- ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி மேலும் சில தகவல்கள்
முதலீடு செய்யப்பட்ட பணம், வருமான வரி பிரிவு 80 சி கீழ் விலக்குக்கு தகுதியானது. கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து, 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும், இந்த கணக்கு முதிர்ச்சி அடையும். தற்போதைய வட்டி விகிதம் படி, ஆண்டுக்கு 7.6% வட்டி என்று கணக்கிடப்படுகிறது. இது ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. கணக்கின் காலம் முடிந்ததும், வட்டி உட்பட கணக்கில் இருக்கும் முழுத் தொகையையும், பெண் குழந்தை, அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து, திரும்பப் பெறலாம். உயர் கல்விகாகவும், இத்தொகையை திரும்ப பெறலாம். அதற்கு, பெண் குழந்தை 18 வயதை அடைந்து, 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பெண் குழந்தை,18 வயதை அடைந்து திருமணம் செய்துகொண்டாலும், SSY கணக்கை, முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.