Loading...
தேனி சிறை உடைப்பு சம்பவம்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்
தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தேனி சிறை உடைப்பு சம்பவம்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
04:09 pm

செய்தி முன்னோட்டம்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிச் சென்ற பெரும் பரபரப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சிஐடியின் அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருந்த கே. சங்கர் புதிய சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்ட DGP சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரியத்துறை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறை உடைப்பு

தேனி சிறை உடைப்பும் தொடர் தப்பியோட்ட சம்பவங்களும்

தேனி சிறையில் பலத்த பாதுகாப்பையும் மீறி 17 கைதிகள் சுவரை ஏறி தப்பி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடப்பட்ட நிலையில், 36 மணி நேரத்திற்குள் அவர்கள் அனைவரும் மீண்டும் பிடிபட்டனர்.

கவனக்குறைவாக இருந்ததாக 9 சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்த டிஜிபி சந்தீப் ரத்தோர், சிறைகளில் தேவைப்படும் சூழலில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

முன்னதாக, சென்னை புழல் மத்திய சிறையிலிருந்தும் அண்மையில் இரண்டு விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மாநிலத்தின் முக்கிய சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்ததால், சிறைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்தன.

புதிய சிறைத்துறை ADGP

புதிய சிறைத்துறை ADGP-யாக ஐபிஎஸ் சங்கர் நியமனம்

மாநிலத்தின் முக்கியச் சிறைகளில் அடுத்தடுத்து பாதுகாப்பு மீறல்கள் நடந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் அரசிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாகவே சந்தீப் ரத்தோர் சிறைத்துறையிலிருந்து மாற்றப்பட்டு, மின்வாரியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் சந்தீப் ரத்தோர் மாநிலத்தின் காவல்துறை தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரக் குற்றப் பிரிவு (EDCID) ஏடிஜிபியாக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி சங்கர், தற்போது புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை நிர்வாகத்தை உடனடியாகச் சீரமைக்க புதிய ஏடிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT