
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் நேற்று நள்ளிரவு திடீரென்று பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து நடந்ததை அறிந்ததும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
ஒரு படகில் ஏற்பட்ட தீ விபத்து மற்ற படகுகளுக்கும் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், படகில் இருந்த LPG சிலிண்டர் வெடித்ததால் தீ பரவ தொடங்கி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மர்ம நபர்கள் தங்கள் படகுகளுக்கு தீ வைத்து விட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
விசாகப்பட்டினத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து
#WATCH | Morning visuals from #Visakhapatnam fishing harbour where a massive #fire broke out last night. Fire tenders are engaged in controlling the fire.
— Hindustan Times (@htTweets) November 20, 2023
(📹 ANI ) pic.twitter.com/Ky42N0GL8A