Page Loader
58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலிடம்
திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டிக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது

58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலிடம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 31, 2023
02:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களின் சிறப்புகளுக்கு தொடர்ச்சியாக புவிசார் அங்கீகாரம் கிடைத்து வரும் நிலையில், தற்போது, வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது எனக்கூறினார். காஞ்சிபுரம் பட்டு தொடங்கி, பல்வேறு வேளாண் பொருட்கள், கைவினை பொருட்கள் என இந்தியாவிலேயே அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்ற மாநிலம் தமிழகம் தான் என அவர் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

புவிசார் குறியீடு அங்கீகாரம்