Page Loader
இரங்கல் தீர்மானத்துடன் இன்று முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்
இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது

இரங்கல் தீர்மானத்துடன் இன்று முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 09, 2024
10:50 am

செய்தி முன்னோட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டசபைத் துவங்கியதும், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன், ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி போன்ற பலரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். பின்பு, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெள்ள பாதிப்பு, சாத்தனூர் அணை திறப்பு சர்ச்சை, சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் இருவர் உயிரிழந்தது, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், உள்ளாட்சிகள் இணைப்பு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் எழுப்ப திட்டமிட்டுள்ளதால், விவாதம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post