தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
மாவட்டங்கள்
எந்தெந்த மாவட்டங்களில் மழை?
மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக: இன்று (மார்ச் 22): தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 23-28: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை
வெப்பம் 2-3° செல்சியஸ் உயர வாய்ப்பு
மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.