Page Loader
தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு

தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

எழுதியவர் Nivetha P
Feb 10, 2023
03:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஜெயின் தலங்களை உள்ளடக்கிய 5நாட்களுக்கான ஜெயின் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் மாதம் 16ம்தேதி சென்னையில் துவங்கும் இந்த பயணம் புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல், மதுரையிலுள்ள சமணர்மலை தீர்த்தங்கரர் இல்லம், பிராமி கல்வெட்டு, மதுரை யானைமலையில் உள்ள லடான் கோயில், கிடாரிப்பட்டி ஜெயின் நினைவு சின்னங்கள், மேலூரில் உள்ள ஜெயின் குகை, திருமங்கலம் ஸ்ரீ வெட்டுவங்கத்தில் உள்ள ராக் கட் கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை, உளுந்தூர்பேட்டையில் உள்ள திருநறுங்கொடை, திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில், வேலூரில் உள்ள வள்ளிமலை மற்றும் திருபருத்திக்குன்றம் ஆகிய ஜெயின் தளங்களுக்கு சென்று பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

1800-4253-1111 இலவச தொலைபேசி எண்

பயணத்தை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் சென்னையில் உள்ள TTDC அலுவலகத்தை அணுகலாம்

மேலும் இந்த சுற்றுப்பயணத்திற்கான பேக்கேஜ் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். ஒரு ஏசிபொருத்திய அறை மற்றும் ரயிலில் ஏசிகோச்சில் பயணம் செய்ய பெரியோருக்கு 16ஆயிரமும், குழந்தைக்கு 8ஆயிரமும் ஆகும். அதேபோல் ஏசி அல்லாத ஓர் தனிஅறை மற்றும் ரயிலில் ஏசிகோச்சில் பயணம்செய்ய பெரியோருக்கு 13ஆயிரமும், குழந்தைக்கு 7ஆயிரத்தி ஐநூறும் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே அறையை பகிர்ந்துகொண்டால் ஏசிபொருத்திய தங்குமிடம் மற்றும் ரயிலில் ஏசிகோச்சில் பயணம்செய்ய ரூ.11ஆயிரமும், ஏசி பொருத்தப்படாத தங்குமிடம் மற்றும் ரயிலில் ஏசிகோச்சில் பயணம் செய்ய ரூ.9ஆயிரத்தி ஐநூறு செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய சென்னையில் உள்ள TTDC அலுவலகத்தை 1800-4253-1111 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.