LOADING...
விஜய்க்கு எதிராக போலீசில் புகார் அளித்த டிடிவி தினகரன்: தமிழக அரசியலில் புதிய பூகம்பம்!
விஜய்க்கு எதிராக போலீசில் புகார் அளித்த டிடிவி தினகரன்

விஜய்க்கு எதிராக போலீசில் புகார் அளித்த டிடிவி தினகரன்: தமிழக அரசியலில் புதிய பூகம்பம்!

எழுதியவர் Venkatalakshmi V
May 09, 2026
08:10 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தவெக (TVK) மற்றும் அதிமுக (AIADMK) அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் உச்சகட்டமாக, மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜின் ஆதரவுக் கடிதத்தை விஜய் தலைமையிலான தவெக போலியாகத் தயாரித்ததாகக் கூறி, டிடிவி தினகரன் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவுப் பட்டியலில் காமராஜின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது "போலியான ஜெராக்ஸ் நகல்" என்றும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-வை விஜய் தரப்பு கடத்த முயற்சிப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடியாக, காமராஜ் சுயமாக முன்வந்து ஆதரவுக் கடிதம் எழுதும் வீடியோ காட்சிகளைத் தவெக வெளியிட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

திருப்பம்

ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய திருப்பம்

தவெக வெளியிட்ட வீடியோவை மறுத்த டிடிவி தினகரன், சில மணி நேரங்களிலேயே எம்.எல்.ஏ காமராஜை நேரில் அழைத்துக்கொண்டு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்தார். அப்போது, அமமுக-வின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கே என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். விஜய்க்கு ஆதரவாகக் காட்டப்பட்ட கடிதம் முற்றிலும் போலியானது என்றும், இது குறித்துக் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

முட்டுக்கட்டை

மெஜாரிட்டியில் நீடிக்கும் முட்டுக்கட்டை

தற்போதைய நிலவரப்படி, விஜய் ஆளுநரிடம் 116 எம்.எல்.ஏ-க்களின் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் இரண்டு இடங்கள் தேவை. ஐயுஎம்எல் (IUML) ஏற்கனவே தனது ஆதரவை மறுத்துள்ள நிலையில், விசிக (VCK) துணை முதலமைச்சர் பதவி கேட்டுப் பிடிவாதம் பிடிப்பது விஜய்யின் வாய்ப்புகளைச் சிக்கலாக்கியுள்ளது. மறுபுறம், அதிமுக-விற்கு ஆதரவாக அமமுக கைகோர்த்திருப்பது, அந்த அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. போலி கடிதப் புகார் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மாயமானதாகக் கூறப்படும் புகார்களால் ஆளுநர் மாளிகை மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் சனிக்கிழமை நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட விஜய்யின் பதவியேற்பு விழா மேலும் தள்ளிப்போகிறது.

Advertisement