தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!
குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 'மோப்ப நாய்கள்' பயன்படுத்துவது வழக்கம். குற்றவாளிகள் விட்டு சென்ற தடயங்கள் மற்றும் துறுப்புகள், மோப்ப நாய்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கு நாயின் வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுத்து ஓடும் திறன் கொண்ட ஆண் காவலர்கள் மட்டுமே இதுநாள் வரை நியமிக்கப்பட்டிருந்தனர் . மோப்ப நாய்களை பராமரிக்கவும் ஆண் காவலர்கள் மட்டுமே! தற்போது முதன்முறையாக கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாளுவதற்கு 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரை சேர்ந்த 'கவிப்பிரியா' என்பவரும், தேனி மாவட்டதைச் சேர்ந்த 'பவானி' என்பவரும் தான் இவ்விரண்டு பெண் காவலர்கள். மோப்ப நாய் பிரிவில் 2 பெண் காவலர்கள் நியமிக்கபடுவது இதுவே முதல் முறை ஆகும்.