LOADING...
கோடை வெயிலுக்கு குட்பை! மே 26 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மே 26 வரை கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோடை வெயிலுக்கு குட்பை! மே 26 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவக்கூடும். கூடுதல் விபரங்கள் இங்கே:-

மழைக்கான வாய்ப்பு

இன்று (மே 23) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்ட வாய்ப்புள்ளது. திருப்பட்டுர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களின் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வானிலை நிலவரம்

நாளை மற்றும் திங்கட்கிழமைக்கான (மே 24, 25) வானிலை நிலவரம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் திங்கட்கிழமைகளில் தமிழகத்தில் மழையின் பரப்பளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 50 கிமீ வேகக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கக்கூடும்.

Advertisement

மழை முன்னறிவிப்பு

மே 26 முதல் மே 29 வரையிலான மழை முன்னறிவிப்பு

மே 26 ஆம் தேதியன்று கோவை, திருப்பூரின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அன்று கனமழை தொடரக்கூடும். அதன் பிறகு மே 27 முதல் மே 29 வரை தமிழகம் மற்றும் புதுவையில் மழையின் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இந்த நாட்களின் இறுதிப் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement

சென்னை

தலைநகர் சென்னை நிலவரம்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.

Advertisement