Loading...
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
03:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. "யாரேனும் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று நேரடியாகக் கூறுங்கள்; உடனடியாக அதுகுறித்து அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்

லஞ்ச ஒழிப்பு புதிய வாட்ஸ்ஆப் மற்றும் தொடர்பு எண்கள்

பொதுமக்கள் அரசு அதிகாரிகளின் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை பின்வரும் வழிகளில் உடனடியாகத் தெரிவிக்கலாம்.

புதிய வாட்ஸ்ஆப் எண்: 94981 80936 (தகவல் மற்றும் புகார்களை அனுப்பலாம்)

மின்னஞ்சல் முகவரி: dvac@nic.in

தொலைபேசி எண்கள்: 044-22321090, 22321085, 22310989, 22342142

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அனைத்து துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

வழிகாட்டுதல்

குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்

அந்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்" என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகளை எளிய தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் கட்டாயம் வைக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் புதிய வாட்ஸ்ஆப் புகார் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) இணையதள இணைப்பை வெளியிட வேண்டும் எனவும் இதற்கு முந்தைய உத்தரவுகள் பல அலுவலகங்களில் முறையாகப் பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த முறை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த விழிப்புணர்வுப் பலகை வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT