தமிழக தலைமைச் செயலகத்தில் புதிய இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு நிர்வாக வசதிக்காகவும், பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் 'இந்து சமய அறநிலையத் துறை' என்ற புதிய தனித் துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், தலைமை செயலகத்தில் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் இப்புதிய தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை இயங்கி வந்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம் , இனி முழுமையாக இந்த புதிய தனித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.
பொறுப்பு
கூடுதல் பொறுப்பு நியமனம்
புதிய துறை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் நிர்வாக விதிகள் மற்றும் தலைமை செயலக நடைமுறை விதிகளில் மாற்றங்கள் கொண்டுவர மனித வள மேலாண்மைத் துறை தனியாக அரசாணை வெளியிடும்.
மேலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ராஜாராமன், மறு உத்தரவு வரும் வரை இப்புதிய இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.