மின்வாரியத்தில் 8,000 ஃபீல்டு அசிஸ்டெண்ட் பணியிடங்கள்: இரண்டு கட்டங்களாக நிரப்பத் திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO/TNEB) காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மின்வாரியத்தின் களப் பணியிடங்களை வலுப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, இப்பணியிடங்கள் இரண்டு கட்டங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக நிரப்பப்படவுள்ளன. மின்வாரியத் தலைவரின் விரிவான பரிந்துரையின் அடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ள 8,000 கள உதவியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.341.26 கோடி ஊதியச் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
TNEB have received initial approval for hiring 8000 Field assistant posts. Hiring will be done phased manner first phase 5,000 posts in 2027 and 3,000 posts in 2028 by Direct Recruitment through TNPSC.
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) October 29, 2026
TNPSC
TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக் காலங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு TNPSC இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வாரிய வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.