தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு?
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் நேற்று(டிச.14) உதயநிதி ஸ்டாலிறுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோக, 10 அமைச்சர்களுக்குத் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சர்களின் விவரங்களைக் கீழே பார்க்கலாம்.
அமைச்சரவையில் நடந்த மாற்றங்கள்:
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வந்த சிறப்பு திட்ட அமலாக்க துறை உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை ஐ.பெரியசாமிக்கும் கூட்டுறவுத் துறை பெரியகருப்பனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை ராமச்சந்திரனுக்கும் வனத்துறை மதி வேந்தனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துச்சாமி கவனித்து வந்த சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், சேகர்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி கவனித்து வந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆர்.காந்தி இதைக் கவனித்து வந்தார். பூதானம்/கிராம தானம் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.